கவலை தெரியாத மனம்..!
குழந்தை
குழந்தைப் பருவம்
மீண்டும்கிடைக்குமா
என்று ஏங்க வைக்கும்
கவலை தெரியாது
கள்ளம் கபடம்
எதுவும் அறியாப்
பருவம்
மழலைப் பேச்சில்
மக்களின் மனம்
மகிழுமே
என்றும் பதினாறு
என்று மார்கண்டேயனுக்கு
வரம் தந்த
இறைவா
சூது வாது
ஏய்த்து பிழைத்தல்
சுயநலம் ஏதுமற்ற குழந்தை மனம்
அனைவருக்கும்
கிடைக்க

வரம் தரவேண்டும்
இறைவா
அமைதியான
அன்பான உலகம்
குழந்தை மனம்
இருந்தால் கிடைக்குமே
ரசிகா
நன்றி வணக்கம்