சாந்தன் துயிலாலயம் திறப்பு: எள்ளங்குளத்தில் நினைவு நிகழ்வு
சாந்தன் துயிலாலயம் வடமராட்சி எள்ளங்குளம் மயானத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது.குறித்த நினைவாலயத்தை , தனது மகனை உயிரோடு காண வேண்டும் என்ற ஏக்கத்தோடு காத்திருந்து, நிறைவில் ஏமாற்றத்தோடு சாந்தனுக்கு விடைகொடுத்த அமரர் சாந்தனின் தாயாரால் திறக்கப்பட்டது.

தமிழக சிறையில் 33 ஆண்டுகள் அரசியலாலும் அரசாங்கங்களாலும் அடக்குமுறைக்கு உள்ளாகி உயிரிழந்த சாந்தனின் முதலாம் ஆண்டு நினைவு நாளாகிய இன்று இந்த சிறப்பு நிகழ்வு இடம்பெற்றது.
எள்ளங்குளம் மயானத்தில், காலை 9மணியளவில் ,அமரர் சாந்தனின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், பொதுமக்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
குறித்த நினைவு வணக்க நிகழ்வின்போது, சாந்தனின் உயிரிழப்பு தொடர்பாகக் கருத்துக்கள் பகிரப்பட்டு, அவரின் தியாகத்தை நினைவேந்திய பல உரைகள் நிகழ்த்தப்பட்டன.