இந்தியா,சீனாவிற்கு இடையில் நலலுறவு ஏற்பட்டுள்ளது-சீனா..!
இந்தியா சீனா இரு நாடுகளுக்கும் இடையில நல்லுறவு ஏற்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு துறை மந்திரி யங் ஜி நேற்று செய்தியாளர்களை சத்து பேசினார் இதன் போது இந்திய சீனா இடையேயான உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதன் போது கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் ” கடந்த ஆண்டு ரஷ்யாவின் கசான் நகரில் இந்தியப் பிரதமர் மோடி,சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங் இடையே சந்திப்பு நடைப்பெற்றது.இந்த சந்திப்பிற்கு பின் இந்தியா சீனா இடையேயான நல்லுறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இரு நாடுகளும் பல்வேறு கட்டங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டு சிறப்பான முடிவுகளை பெற்றுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
