சிதம்பரா கணிதப்போட்டி நாளை |உலகமெங்கும் ஒரேநாளில்
தாயகத்திலும் , புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் மாணவர்கள் ஒரே நாளில் பங்குபற்றும் சிதம்பரா கணிதப்போட்டி நாளை மார்ச் மாதம் 8ம்திகதி சனிக்கிழமை இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்குபற்றும் இந்த போட்டிப்பரீட்சைக்காக மாணவர்கள் தங்களை மிகவும் தயார்படுத்தி , போட்டிப்பரீட்சைக்கு வருவார்கள் என்பது முக்கியமானதாகும்.

ஆரம்பத்தில் லண்டனில் மட்டுமே நடாத்தப்பட்ட இந்தப்பரீட்சைகள், இப்போது பல நாடுகளிலும் வியாபித்து, இலங்கை தமிழ் பேசும் மாணவர்களுக்கு, முற்றிலும் இலவசமாக பரீட்சைக்கு முகங்கொடுக்கக்கூடியதாக, சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகக்குழு இதனை ஏற்பாடு செய்து வருகிறது.
நாளை அகில இலங்கை ரீதியில் சரியாக காலை 9 30 க்கு பரீட்சைகள் ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஐக்கிய இராச்சியத்திலும் சம நேரத்தில் ,கிட்டத்தட்ட 35 க்கும் மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடக்கும், அதேபோல, கனடா, பிரான்ஸ்,ஜேர்மனி,அமெரிக்கா ,அவுஸ்ரேலியா,நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் பரீட்சைகள் இடம்பெறும்.

இந்த பரீட்சைகளில் வெற்றிபெறும் மாணவர்களை வெற்றி அரங்கில் கௌரவிக்கும் நிகழ்ச்சி வரும் ஜூலை மாதம் , சிறப்பாக லண்டன் அரங்கில் இடம்பெறும்.
அதேவேளை தாயகத்தில் முதலிடங்டளை பெற்ற மாணவர்களும் இதே லண்டன் அரங்குக்கு அழைத்து வரப்பட்டு மாண்பேற்றிக் கௌரவிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.