ஆதி முதல் இன்று வரை..!
இன்றையக் காதல்
இப்புவியூலகம் முழூவதும் மௌனமாய் இருப்பது
ஆதி முதல் இன்று வரை
எண்ணிலடங்கா
கவிதைகள்
கதைகள் காவியங்கள்
மனதைக் கிள்ளும்
பின்பு கொல்லும்

சுவையா
சுமையா யாருக்கும்
தெரியாது
அரசனை அடிமையாக்கும்
ஆண்டியை அரசனாக்கும்
ஏமாற்றங்கள் உண்டு
ஏற்றங்கள் வந்திடலாம்
காதல் உடல் சார்ந்ததாக
இன்று
காலையில்
மலர்ந்தது
மாலையில்
வாடுது
தற்காலத்தில் அல்லோலப்படுகிறது
புரிதல் இல்லாமல்
இவண்
பா. சுரேஷ் பாபு
அம்பத்தூர்
சென்னை
10/02/2025