கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி (Mark Carney)

கனேடிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்  மார்க் கார்னி, ஆளுங்கட்சியான லிபரல் கட்சியின் சார்பில் தலைவராக வெற்றிபெற்று கனடாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 9 வருடங்களாக கனடாவின் பிரதமராக செயற்பட்ட ஜஸ்டின் ட்ரூடோ, தனது சொந்த கட்சியிலிருந்து வந்த தொடர்  அழுத்தத்தின் காரணமாக கடந்த ஜனவரி மாதம், பதவி விலகலை அறிவித்திருந்தார்,
தொடர்ந்து கனடாவின் புதிய பிரதமரை/லிப்ரல் கட்சியின் புதிய தலைவரை  தெரிவு செய்வதற்காக நேற்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் மார்க் கார்னி 86 வீதமான வாக்குகளை பெற்றுக்கொண்டார் என்று அறிவிக்கப்பட்டது.

மார்க் கார்னியை எதிர்த்து முக்கியமான போட்டியாளராக நிதியமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் களமிறங்கியிருந்தார் எனினும் அவரை,  மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று கட்சித்தலைமையை கைப்பற்றிக்கொண்டார்.

கனடாவுக்கு எதிராக ஏற்கனவே உலகத்தளத்தில் அமெரிக்க வர்த்தக போரை மேற்கொண்டுவரும் இந்தக்காலகட்டத்தில் புதிய பிரதமர் தெரிவு என்பது மிகப்பெரும் பேசிபொருளாக  இடம்பெற்றிருக்கிறது.

அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு எதிராக கனடா அமெரிக்க பொருட்கள் மீதும் விதித்திருந்த வரி தொடர்ந்தும் இருக்கும் என பிரதமர் தெரிவின் பின்  உரையாற்றிய மார்க் கார்னி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பிரதமரான மார்க் கார்னி,  வரும் ஒக்ரோபர் மாதத்திற்கு முன்னதாகவே தேர்தலை அறிவித்து,  லிபரல் கட்சியின் தலைவராக நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலை எதிர்கொள்வார்.

அரசியல் பின்புலம் இல்லாத ஒருவர், நிதியியல் துறையில் அதிகாரம் மிக்க பதவியில் இருந்த ஒருவராக ,  கனடாவின் பிரதமராக பதவியேற்கும் ஒருவராக மார்க் கார்னி அமைகிறார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *