நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் – கிரிஜா அருள்பிரகாசம் தெரிவு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பட்டமளிப்பு விழாவில், ஊடகவியலில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவருக்கு வழங்கப்படும் அமரர் சகோதவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இந்த ஆண்டு ஊடகத்துறை மாணவி கிரிஜா அருள்பிரகாசத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த கிரிஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைநெறியில் தனது திறமையை நிரூபித்ததற்காக இந்த விருதைப் பெற்றுள்ளார்.
2007ஆம் ஆண்டு, ஊரடங்கு நேரத்தில் ஆயுததாரிகளால் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சனை நினைவுகூரும் வகையில், அவரது நண்பர்கள் இணைந்து இந்த பதக்கத்தை வழங்க ஆரம்பித்திருந்தனர்.
கடந்த ஆண்டுகளில் பல திறமையான மாணவர்கள் இந்த விருதைப் பெற்றுள்ள நிலையில், இந்த ஆண்டின் சிறப்புக்குரியவராக, ஊடகத்துறையில் திறமையை வெளிப்படுத்திய கிரிஜா அருள்பிரகாசம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விழாவில் உரையாற்றிய கிரிஜா, ஊடகத்துறையில் தனது எதிர்கால பயணத்தை உறுதியாகக் கூறியதோடு, இந்த விருதினை வழங்கிய அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.