பேராசிரியர் துரைராஜா பதக்கம் வென்ற குகயாழினி
பேராசிரியர் அழகர் துரைராஜா தங்கப்பதக்கத்தை இந்தத்தடவை மோகன் குகயாழினி பெற்று சாதனைபடைத்துள்ளார்.

வருடாவருடம் யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் இந்த பதக்கத்தை இந்தமுறை குகயாழினி பெற்று சாதனையை பதிவு செய்துள்ளார்.
கலைப்பட்டதாரியாக கல்வி கற்று வெளியேறும் குகயாழினி, பல்துறை ஆற்றலால் ஆளுமை மிகுந்தவராக அடையாளம் காணப்பட்டு , 2020 ம் ஆண்டுக்கான தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.