பொறியியலில் தங்கப்பதக்கம் வென்ற மலையக மாணவி செல்வி ராஜ்குமார் திலக்சனி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழாவில், மலையகத்தை சேர்ந்த செல்வி ராஜ்குமார் திலக்சனி, பொறியியல் தொழிநுட்பப்பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
பொறியியல் தொழில்நுட்பத்துறையில் (Bachelor of Engineering Technology Honours) முதல் தரச்சித்தியுடன் (First Class) இந்த தங்கப்பதக்கத்தையும் (Gold Medal) வெற்றிகரமாக பெற்று பெருமை பெற்றுள்ளார்.

கே/இந்து தேசியக் கல்லூரி, புஸல்லாவையில் தனது கல்விப் பயணத்தைத் தொடங்கிய அவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் தொழில்நுட்ப பீடத்தில் தனது உழைப்பால் இந்த பெருமைமிக்க சாதனையை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.