சாமர சம்பத் தசநாயக்கவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து உத்தரவு பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், இன்று (01) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.