பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் கொழும்பை அணிமித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பாதுகாப்பிற்காக சுமார் 6,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் பொலிஸாரை தவிர, இலங்கை இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
இராணுவத்தினர் வீதித் தடுப்புப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளதோடு பொலிஸார் சிவில் உடையில் பாதுகாப்புப் பணிகளுக்காக ஆயுதம் ஏந்தியபடி பணி ஈடுபடவுள்ளனர். மேலும், புலனாய்வு அதிகாரிகளும் இந்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.