தாய்வானை சுற்றியுள்ள கடற் பிராந்தியத்தில், சீனா போர் பயிற்சி..!
தாய்வானை சுற்றியுள்ள கடற் பிராந்தியத்தில் சீனா போர் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளது.
இன்று 2வது நாளாக சீனாவானது தனது இராணுவத்தின் மூலம் போர்கப்பல்கள் போர் விமானங்கள் கொண்டு பயிற்ச்சியில் ஈடுப்பட்டுள்ளது.

பிரிவினைவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்த போர் பயிற்சி இடம் பெறுவதாக சீன இராணுவம் தெரிவித்துள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கைகளுக்கு தாய்வான் அதிர்ப்தி வெளியிட்டுள்ளது.