மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி காலமானார்

மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி நீலம் பென் பரிக் தனது 93 வயதில் உயிரிழந்துள்ளார்.
இவர் மகாத்மா காந்தியின் மகன் ஹரிதாஸ் காந்தியின் வழித்தோன்றல் ஆவார்.
தனது தாயார் ராமிபென் மற்றும் தந்தை யோகேந்திரபாய் பாரிக் ஆகியோரின் சேவைகளால் ஈர்க்கப்பட்ட இவர், குழந்தை பருவத்திலிருந்தே காந்தியின் கொள்கைகளை பின்பற்றி வந்தவர்.
இந்நிலையில், நீலம் பென் பரிக் உடல் நலக் குறைவால் காலமானார்.