நாகரிகமற்ற செயல் தண்டிக்கப்பட வேண்டும்- றஜீவன் எம்.பி காட்டம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், விஞ்ஞான பீட புதுமுக மாணவன் ஒருவர், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ள நாகரிகமற்ற செயல் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் சக மாணவரை உடல் ரீதியாகவும்
மனதளவிலும் பாதிப்புக்குள்ளாக்கும் இந்த பயங்கரமான கலாசாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், ராக்கிங் என்ற போர்வையில் நடக்கும் வன்முறை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவரின் எதிர்பாராத துயரத்திற்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், விஞ்ஞான பீட புதுமுக மாணவன் ஒருவர், சிரேஷ்ட மாணவர்கள் சிலரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு தலைக்கவசத்தால் தாக்கப்பட்டதில் அம் மாணவன் கேட்கும் திறனை இழந்துள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்பு குறித்து உரிய தரப்பு மீது கேள்விகளை எழுப்புகின்றேன்.
மாணவர் மீது நடக்கும் எந்தவொரு வன்முறையையும் தடுக்க உறுதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என் தெரிவித்துள்ளார்.