பவர் ப்ளேயில் 3 விக்கட்டுகளை இழந்திருக்க கூடாது-ரஜத் படிதார்..!
பெங்களூர் அணியின் தோல்விக்கு இது தான் காரணம் என்று பெங்களூர் ரோயல் செலன்ஞ்சஸ் அணி யின் தலைவர் ரஜத் படிதார் காரணத்தை வெளியிட்டுள்ளார்.

பவர் ப்ளேக்கு நாங்கள் 190 ஓட்டங்களை இலக்காக கொண்டிருந்தோம் ,ஆனால் ஆரம்ப விக்கட்டுக்களை இழந்தது இந்த போட்டிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.நோக்கம் நன்றாக இருந்தது என்று நான் நினைக்கிறேன்,ஆனால் பவர்ப்பிளேயில் நாங்கள் 3 விக்கட்டுக்களை இழந்திருக்க கூடாது.
ஜிதேஷ்,லியாம்,லிவிங்ஸ்டோன் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் துடுப்பெடுத்தாடிய விதம் எங்களுக்கு சாதகமாக இருந்தது.துடுப்பாட்ட வரிசையைப்பற்றி நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்,அவர்கள் சில நேர்மறையான நோக்கங்களைக் காட்டுகிறார்கள்,இது எங்களுக்கு மிகவும் நல்லது என தெரிவித்தார்.