“எக்ஸ்” தளத்தில் தமிழில் நன்றி தெரிவித்து இந்திய பிரதமர்..!
இந்திய பிரதமர் மோடி 3 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை வந்தடைந்தார்.
இவருக்கு விமான நிலையத்தில் வைத்து சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.இன்று இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வை சந்தித்து கலந்துரையாடினார்.இதன் போது பல்வேறுப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இதே வேளை இலங்கை அரசினால் பிரதமர் நரேந்திர மோடிக்கு மித்ர விபூஷண பதக்கம் வழங்கப்பட்டது.இந்த பதக்கம் இலங்கை இந்திய உறவுகளின் அன்பையும் ஆழத்தையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.மேலும் எக்ஸ் தளத்தில் இலங்கைக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் தமிழ் மொழி மூலம் பதிவொன்றை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.