எம்புலன்ஸ் ஹெலிகொப்டர் கடலில் வீழ்ந்து விபத்து..!
எம்புலன்ஸ் ஹெலிகொப்டர் கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த சம்பவமானது ஜப்பானில் இடம் பெற்றுள்ளது.குறித்த ஹெலி கொப்டரில் நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு நாகசாகி விமான நிலையத்திலிருந்து புகுவோகா வில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு பயணிக்கும் போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.இதனையடுத்து இரண்டு காவல் படை விமானங்கள் மற்றும் மூன்று ரோந்து கப்பல்கள் மூலம் தேடுதல் பணிகள் நடந்தன.

இந்த விபத்தில் நோயாளி,வைத்தியர், பராமரிப்பாளர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.இதில் பயணித்த விமானி,ஹெலிகொப்டர் மெக்கானிக்,தாதி ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.