இந்திய ஜனாதிபதி போர்த்துக்கல்லிற்கு விஜயம்..!
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு 4 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு ஐரோப்பா சென்றுள்ளார்.இதில் முதற் கட்டமாக போர்த்துக்கல்லிற்கு சென்றுள்ளார்.
இவரை இந்திய தூதுவர் புனீத் ஆர் குண்டல் மற்றும் இந்தியாவில் உள்ள போர்த்துக்கல் தூதுவர் ஜோவா ரிபேரோ டி அல்மீடியா ஆகியோர் வரவேற்றனர்.

இவர் அங்கு உயர் மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளார்.இதனை தொடர்ந்து அங்கிருந்து சுலோவாகியா நாட்டிற்கு செல்லவுள்ளார்.அங்கும் உயர் மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளார்.இந்த இரு நாடுகளுடனான விஜயத்தின் போது இந்தியாவிற்கும் அந்நாடுகளிற்கும் இடையேயான மூலோபாயம்,வர்த்தகம்,பொருளாதாரம் என பல விடயங்கள் பேசப்படுவதோடு பல்வேறு ஒப்பந்தளும் கைச்சாத்தாக இருக்கின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.