இணைந்து செயற்பட இந்தியாவிற்கு சீனா அழைப்பு..!
அமெரிக்காவின் வரி விதிப்பை இணைந்து எதிர்கொள்ள சீனாவானது இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் பதிவொன்றை இட்டுள்ளார்.”சீனா – இந்தியா பொருளாதார வர்த்தக உறவு இரு தரப்பு நன்மைகளை அடிப்படையாக கொண்டது .
அமெரிக்காவின் வரிவிதிப்பை எதிர் கொள்ளும் உலகின் 2 வளர்ச்சியடைந்த நாடுகள் இணைந்து செயல் பட்டு இந்த கடினமான சூழ்நிலையை கடக்க வேண்டும்” என பதிவு செய்துள்ளார்.
