சம்மாந்துறை நோக்கிப் பயணித்த உர லொறி குடைசாய்ந்து விபத்து

கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கிப் பயணித்த உர லொறியொன்று இன்று முற்பகல் 8 மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணானை-ஜெயந்தியாயவில் பாதையை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது.
சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பில்லை என்பதுடன், வாகனத்தில் திடீரென ஏற்பட்ட கோளாரே விபத்துக்கான காரணமென ஆரம்பக்கட்டத் தகவல் மூலம் தெரிய வருகின்றது.