2025 சீசன் எங்களுக்கு சிறந்ததாக அமையும்-ருது ராஜ்..!
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் ஐ.பி.எல் போட்டியில் இருந்து விலகியது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

” லேசான எலும்பு முறிவால் ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்கவில்லை.ஆனால் வீரர்களுடன் தொடர்ந்து பயணித்து அவர்களை ஊக்கப்படுத்துவேன்.கடந்த சில போட்டிகளில் நாங்கள் சிறப்பாக ஆடவில்லை.இளம் விக்கெட் கீப்பர் அணியை வழிநடத்த உள்ளதால் அனைத்தும் மாறும் என உறுதியாக நம்புகிறேன்.2025 சீசன் எங்களுக்கு சிறந்ததாக அமையும் என எதிர்ப்பார்க்கிறேன்.தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி”என்று தெரிவித்துள்ளார்.