காலி இந்தியன் ரெஷ்டுரன்ட்க்கு சுற்றுலா சென்று உணவு ஓர்டர் செய்துவிட்டு காத்திருந்த குடும்பத்தை தாறுமாறாக தாக்கிய சம்பவம்….!!!

கொழும்பிலிருந்து சுற்றுலா சென்ற குடும்பம் ஒன்று காலி இந்தியன் ரெஷ்டுரன்ட்ல் இரவு உணவு ஓர்டர் செய்துவிட்டு காத்திருந்த வேளை அவர்களை தாறுமாறாக தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய (16) தினம் சில குடும்ப உறுப்பினர்கள் விடுமுறைக்காக கொழும்பில் இருந்து காலி சென்று, இரவு உணவிற்காக ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு சென்றுள்ளனர்.
தமது குடும்பத்திற்கு தேவையான உணவுகளை ஓர்டர் செய்துவிட்டு உண்பதற்காக காத்திருந்தனர்.
எனினும் சுமார் 30 நிமிடங்களுக்குப் பின்னர் ஹோட்டல் ஸ்டீவர்ட் வந்து, உணவு தீர்ந்து விட்டது, அதனால் உங்களுக்கான உணவு பருமாறமுடியாது என்று தெரிவித்துள்ளார்.
அரைமணி நேரம் தாமத்திருந்த குடும்ப உறுப்பினர்கள் “உணவு கிடைக்கவில்லை என்று தெரிவிக்க 30 நிமிடங்கள் ஆனது ஏன்?” என்று கேள்வி எழுப்பியபோது, இரு தரப்பினருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் ஏற்பட்டுகொண்டிருக்கும் போதே திடிரென்று ஹோட்டல் ஊழியர்கள் இவர்களை இரும்புக் கம்பி உட்பட கையில் அகப்பட்ட பொருட்களால் தாக்கத் தொடங்கியுள்ளனர்.
இதனால் சுமார் 30 பேர் கொண்ட ஹோட்டல் ஊழியர்களின் வெறித்தனமான தாக்குதலுக்கு இக்குடும்பம் ஆளாகியுள்ளது.
தாக்குதல் குறித்து மற்ற குடும்ப உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் உடனடியாக தங்கள் குடும்ப உறுப்பினர்களை இந்தத் தாக்குதலில் இருந்து காப்பாற்ற சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
தமக்காக உதவ வந்த ஏனைய குடும்ப உறுப்பினர்களையும் ஹோட்டல் ஊழியர்கள் தாக்கியுள்ளனர்.
எதிர்பாராத இந்த அசம்பாவிதம் காரணமாக 28 வயது இளைஞருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் பீறிட்டது, 17 வயது சிறுவனுக்கு கண்ணில் காயம் மற்றும் உடலில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டது, மேலும் 14 வயது சிறுவன் ஒருவனுக்கும் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் தமது குடும்பத்திற்கு உரிய நியாயம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றும், தமது தரப்பிடம் அனைத்து ஆதாரங்களும் (வீடியோ பதிவுடன்) இருப்பதாகவும், இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிடமும், அரசிடமும் புகார் செய்யப்போவதாகவும், தாக்கப்பட்ட குடும்ப உறுப்பினர் தெரிவித்தார்.

