முடித்தே தீருவோம்
தலைப்பு : முடித்தே தீருவோம்
முடியாது நடக்காதென்பது
முட்டாள்களின் வாதம் //
முயன்றால் முடியுமென்பதே
போராளிகளின் வேதம் //
தோல்விகள் உனை துரத்த
துவண்டுவிடாதே //
வரும் தடைகளை தகர்த்தெறிந்து
முன்னேறிச்செல் //
வெற்று விமர்சனங்களை விடுத்து
விரைந்திடு //
இலக்கை நோக்கிய
வெற்றிப்படிகளை செதுக்கிடு //
வலிகள் உணர்த்திடும்
வாழ்வின் அர்த்தங்களை //
மனிதர்கள் உணர்வதில்லை
தியாகத்தின் புனிதங்களை //
பெரும்பணம் படைத்தோரின்
வெற்றுக்காகித மோகம் //
இல்லாமையே ஏழைகளின்
நிரந்தர சாபம் //
கைத்தூக்கி விடுவோரை
இங்கே காண்பதரிது //
காலை வாரிவிடும்
கானல்நீர் தோற்றங்கள் //
மனிதஉருவில் வாழும்
நடமாடும் பிணங்கள் //
இவ்வுலகின் உன்னதத்தை
உருக்குலைக்கும் சக்திகள் //
இவையனைத்தையும்
தகர்த்து தன்னம்பிக்கையை தரித்து //
எடுத்த இலக்கினை
முடித்தே தீருவோம் //
மதிப்புறு முனைவர். நா. பாரதி ( கள்ளக்குறிச்சி )
