தர்மத்தின் வழியை அறிவார்களா?
மண்ணின் மைந்தனை சாய்த்து விட்டோமென
அடியோடு சந்ததியை
வேறெடுத்தோமென
அமைதியை கண்டு தாக்குபிடிக்காமலென
சமாதான உறவுகளை விரும்பாதவனென
பேடிபோல் மாற்றுடை வழியில்லாதவனென
காரிஉமிழ கூட தகுதி இல்லாதவனென
தாயை விட்டு விட்டு மாற்றுதாயிடம் பிச்சை இரபவனென
தர்மத்தின் வழியை ஊட்ட நல்லவனொருவன் கூட இல்லாதவனென

வாழ்வதை காட்டிலும் பூமி தாயின் மண்ணுக்காவது உரமாகு
இல்லை
உரமாக்கப்படுவாய்
குமுதா அழகிரி திருச்சி