“தோனி இன்னும் ஒரு IPL சீசனில் விளையாடுவார்”-சுரேஷ் ரெய்னா..!
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் இன்னும் ஓர் IPL சீசனில் விளையாடுவார் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
எக்ஸ பக்கத்தில் சுரேஷ் ரெய்னாவிடம் ரசிகர் ஒருவர் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளிக்கும் போதே “தோனி இன்னும் ஒரு IPL சீசனில் விளையாடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் IPL போட்கள் சிறப்பாக நடைப்பெற்றுவருகிறது.இம்முறை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 09 போட்டிகளில் விளையாடி 02 போட்டிகளில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது.புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.