செய்திகள்

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு சபை கூடிய கூட்டம் ..!

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஐ.நா பாதுகாப்பு சபை நேற்று கூடியது.இதில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் கூட்டம் நிறைவடைந்தது.

எனினும் இந்த கூட்டம் ஆரம்பிக்க முன்பதாக ஐ.நா பொது செயலாளர் எந்தோணியோ குட்டெரெஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.”இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதற்றம் நீண்ட காலமாக உள்ளன.அதே நேரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் கண்டனத்துக்குரியது.

அதில் பலியானவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.எந்த காரணத்துக்காகவும் பொதுமக்களின் மீதான பநங்கரவாத தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. சமீபத்திய பிரச்சினையால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது.பிரச்சினைகளுக்கு இராணுவம் மூலம் தீர்வு ஏறபடாது.எனவே இருநாடுகளும் அதிக பட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.பதற்றத்தை தணிக்க முன்வரவேண்டும்.எந்த தவறும் செய்யாதீர்கள் ராணுவ தீர்வு ஒரு தீர்வாகாது”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *