இன்று எங்கு போனீர்..?
குரு
தன்னலமில்லா போதனையிலே
தனித்துவம் பெற்ற மானிடனாய்
அறிவை கொண்டு ஆழமாய்
சிந்தனை பழக தூண்டிடுமே!
கேள்வி ஞானம் வேண்டி பார்க்த ஆசானே!
இன்று எங்கு போனீர் ஆசானே !!
அகிலம் போற்றும் பாரதமே!
பா ரதத்தில்
உமை ஏற்றிடுவேன்!
குருவென்றால் துரோணர் என
அகிலம் இங்கே போற்றிடவே!
குருவின் தன்மை எதுவென்று
கிருஷ்ணன் நாமம் உணர்த்தினவே!
குருவாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆசான்கள் அனைவருக்கும் இக் கவி சமர்ப்பணம்!
பா ஆக்கம்
அன்புடன்
நா.ஆனந்தி சேது
சீர்மிகு சென்னை
