இயற்கை நியதி..!

எவற்றினுள்ளும்
அமிழ்ந்து
கரைந்து
உறைந்து
போகாதே!

தத்துவங்களும்
மதங்களும்
தோற்றுவித்தவர்களும்
ஞானிகளும்
மகான்களும்
கவிஞர்களும்
அறிஞர்களும்
இவற்றில்
அதிக
விசையோடு
நம்மை
இழுப்பவர்களே!

இவற்றில்
அமிழ்ந்துவிட்டால்
உனக்கான
இயற்கை
நியதி
சுதந்திரம்
ஏதும்
அறிய
இயலாது.

சொர்க்கம்
நரகம்
இம்மை
மறுமை
மும்மை
வினை
விதி
அர்த்த
கர்மம்
தர்மம்
மோட்சம்
போகம்
யோகமா
நன்மை
தீமை
இவையெல்லாம்
ஏற்கனவே
நிச்சயிக்கப்பட்டது
எனின்
அதனை
குறித்து
மாற்ற
இயலாத
வஸ்துவை
பற்றி
பேசி
என்ன
பயன்?

வாழ்க்கை
மிக
எளிமையானது.
நல்ல
இதமான
வார்த்தைகள்.

மனம்
அறிந்து
துரோகம்
இழைத்தல்
இவற்றை
விலக்கு.

பொதி
சுமக்கும்
கழுதையாக
வாழாதே!

எவற்றிலும்
அமிழாத
உன்
வசத்தில்
ஏதும்
இருக்காது.

உனனில்
அமிழ்ந்து
உன்னில்
கரைந்து
போக
வரும்
எதனையும்
ஏற்காதே!

அது
எங்கேனும்
தன்னிச்சையாக
சுழலட்டும்.

அதுவே!

நான்
அறிந்த
சுதந்திரம்.

அதை
வழங்க
தடுக்க
கூட
உன்
வசம்
ஏதும்
இருக்கலாகாது.

இல்லாமை
கூட
சுகம்
தான்.

அதிக
இருப்பு
கூட
துக்கம்
தான்.

தேவதைகளின்
அழகில்
இங்கே
அசுர
வேட்டை.

ஈர்ப்பதற்கு
விலக்குவதற்கு
விளக்குவதற்கு
கரைப்பதற்கு
கலைப்பதற்கு
கரைந்துபோவதற்கு
அங்கே!

இங்கே!

எங்கே!

ஒன்றுமில்லை.

கேலோமி🌹🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *