பதிவுகள்

நாவற்காட்டுக்கும் மங்கிக்கட்டுக்கும் இடைப்பட்ட கரவெட்டி வீதியில் விபத்து ஒருவருக்கு பலத்த காயம்

வவுனதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு கிராமத்திற்கும் மங்கிக்கட்டு கிராமத்திற்கும் இடைப்பட்ட கரவெட்டி வீதியில் இன்று மதியம் 1 மணியளவில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியிருக்கிறது.

குறித்த வீதியால் பயணைத்தை தொடர்ந்துகொண்டிருந்த மோட்டார்சைக்கிளும் முச்சக்கரவண்டியுமே இந்த விபத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. குறித்த விபத்தில் சிக்கிய மோட்டார்சைக்கிளில் நாவற்காட்டை சேர்ந்த இருவர் பயணித்திருக்கின்ற நிலையில் அதில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளதுடன் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவசரசேவை நோயாளர் காவுவண்டி மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனதீவு பொலிஸார் முன்னெடுத்துச் செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *