தேடிக்கொண்டே இருக்கின்றேன்
எதற்காக இந்த விவாதங்கள்
பேசிய பின் துளிரும் ரணங்களுக்காகவா…
யாரோ எழுதிய இந்த வாழ்க்கை நாடகத்திற்கு நான் ஏன் நடிக்க வேண்டும்..?
பழகிய பிம்பங்களுக்கு பிரியாவிடை கொடுத்திட முனைந்த பின்
இந்த அக்கினிப் பரீட்சை எதற்கு ?
வானமும் பூமியும் இரண்டறக் கலந்திட மழை என்னும் மந்திரத் துளிகள் துணை நிற்பதைப் போல்
எனக்காக ஓர் உயிரியல் மரபணுவாவது பூத்திருக்காதா என்ன..?
துளிரும் கனவுகளை கொய்திட திட்டமிடும் வெட்டுக்கிளிகளாய் இருக்கும் என் எண்ணங்களை வளரும் போதே தள்ளி நகர்ந்திடு மனமே….
ஆனந்த கூத்துக் கட்டும் கள்ளிக் காட்டு இதிகாசங்களே
கருணைச் செய்யுங்கள் என்னையும் வைர முத்துவாய் எண்ணி
படைத்து வளர்த்து வாழ்த்தியக் காதைகளைக் கிழித்து எறிய துடிக்கும் என் கூட்டுச் சுண்டெலிகளே..
கற்பனைக்குள் தேக்கி வைத்திருக்கும் குறளோவியங்களின் தடைகளைத் தகர்த்தி அரங்கேற்றும் ஒரு நாளில்
தீராத என் மோகமும் தீர்ந்திடும் என்ற நம்பிக்கையில் என் அசராதக் காதலை
தேடிக்கொண்டே *இருக்கின்றேன்……
எழுதுவது :
ராதை சுப்பையா, மலேசியா