கடந்த ஆறு மாதங்களில் சாதாரண மக்கள் மீதான தாக்குதல்களால் ஆப்கானிஸ்தானில் சுமார் 400 பேர் இறந்திருக்கிறார்கள்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தலிபான் இயக்கத்தினர் ஆப்கானிஸ்தான் ஆட்சியைப் பிடித்ததன் பின்னர் முதல் தடவையாக நாட்டின் நிலைமை பற்றிய ஐ.நா-வின் வெளியாகியிருக்கிறது. அந்த நாட்டின் சாதாரண மக்கள் மீது நடந்த தாக்குதல்களில் இக்கால இடைவெளிக்குள் இறந்தவர்கள் என்ணிக்கை சுமார் 400 என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அத்தாக்குதல்களில் பெரும்பாலும் ஈடுபட்டது ஐ.எஸ் எனப்படும் இஸ்லாமிய காலிபாத் அமைப்பு ஆகும்.
சுமார் 50 பேர் ஐ.எஸ் போன்ற அமைப்புக்களுடன் தொடர்பு உள்ளவர்கள் என்பதால் பிடிக்கப்பட்டு வீதியோரங்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்த அமைப்பு தனது தாக்குதல்களில் சிறுபான்மை மதமான ஷீயா, ஹசாரா மக்களைக் குறிவைத்துக் கொலை செய்கிறது.
ஐ.நா-வின் அறிக்கையை வெளியிட்டுப் பத்திரிகையாளர்களுடன் உரையாடிய மிஷல் பஷலெட் தலிபான்களின் ஆட்சிக்காலம் பெண்களின் உரிமைகளை ஒடுக்கும், பறிக்கும் காலமாக இருந்ததாகக் குறிப்பிட்டார். மனித உரிமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், தலிபான்களை விமர்சிப்பவர்கள் சிலர் காணாமல் போயிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்