அத்தியவசிய பொருளாக கோதுமை மா அறிவிப்பு
கோதுமை மாவினை அத்தியவசிய பொருளாக அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில்
மலையக மக்கள் பிரதான காலை உணவிற்காக கோதுமை மாவினை பயன்படுத்தி வருகின்றனர்.கோதுமை மா விலை அதிகரிக்கும் பட்சத்தில் உடனடியாக பாதிப்படையும் மக்கள் மலையக மக்களாக காணப்படுகின்றனர்.
இவ்வாறான நிலையில் அத்தியாவசியப் பொருளாக அறிவித்து வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், கோதுமை மா அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோதுமை மா, மக்களின் அத்தியாவசியப் பொருளாக இருப்பதால், கடந்த 16ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், குறிப்பிட்ட பொருட்களின் வகையின் கீழ் கொண்டுவரப்பட்டது.