“டிக்டொக்”ற்கு தடை விதித்த நேபாளம்..!
டிக்டொக் செயலியினை பலர் பயன் படுத்திவருகின்றனர். எனினும் தற்போது இந்த செயலியினை பல நாடுகள் தடை செய்து வருகின்றன.
அந்த வரிசையில் தற்போது நேபாளம் இணைந்துக்கொணடுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா,அவுஸ்திரேலியா,இந்தியா உள்ளிட்ட நாடுகள் தடை செய்துள்ளன.
தற்போது நேபாளமும் தடை செய்துள்ளது.சமீபகாலமாக இந்த செயலி மூலமாக பல்வேறு மதத்தினரிடையே வெறுப்புணர்வு தூண்டும் வகையில் காணொளிகள் பதிவிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக சமூக நல்லினக்கத்திற்கு இடையூராக இருக்கும் செயலியாக டிக்டொக் இருப்பதாக நேபாள அரசு கண்டரிந்ததன் அடிப்படையில் குறித்த செயலி தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை நேபாளத்தின் தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சின் செய்தி தொடர்பாளர் ரேகா சர்மா தகவல் வெளியிடுகையில் “டிக் டொக் செயலிக்கு தடை விதிக்க அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.எனினும் அதற்கான காலக்கெடு எதுவும் வரையறுக்கப்படவில்லை “என்று தெரிவித்துள்ளார்.