பஸ் கட்டணம் குறையுமா?
பஸ் கட்டணத்தை குறைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒரு லீற்றர் டீசலின் விலை 307 ரூபாவை எட்டினால் மட்டுமே பஸ் கட்டணத்தை குறைக்க முடியும் என அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
தேசிய பஸ் கட்டணக் கொள்கையின் பிரகாரம் எரிபொருள் விலையை 4வீதம் குறைத்தால் மட்டுமே கட்டணத்தை குறைக்க முடியும் எனவும்,
இம்முறை எரிபொருள் விலை குறைப்பு 2.8 வீதம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வெள்ளை டீசல் லீற்றர் ஒன்றின் விலை 16 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 317 ரூபாவாகும்.