Automatic Dustbin தானே உருவாக்கி அசத்திய மாணவன்.
மதுரை மாவட்டம் தூய மரியன்னை பாடசாலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவனான அஹ்மத் மாஹீ, அந்த பாடசாலையில் நடாத்தப்பட்ட அறிவியல் கண்காட்சிக்காக
(Automatic Dustbin) தானியங்கி குப்பைக்கூடை ஒன்றை தானாக செய்து அசத்தியுள்ளார்.
குறித்த மாணவன் தயாரித்திருக்கும் இந்த தானியங்கி குப்பைக்கூடையானது குப்பைகளை நாம் அதன் அருகில் கொண்டு சென்ற உடனேயே அதுவாக திறந்து கொள்ளும். பின்னர் குப்பையை நாம் அதினுள்ளே இட்டவுடன் அதுவாகவே மூடிக்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை காட்சியாக வெளியிட்டு பலரது பார்வையையும் தன்வசம் திருப்பியுள்ளார்.
மாணவனின் திறமையை பாராட்டும் அதேவேளை இந்த தானியங்கி குப்பைக்கூடை எப்படி இயங்குகிறது என்பதை கீழே உள்ள காணொளியில் காணுங்கள்