இனி சொத்து உரிமையாளர்களுக்கும் வரி|பரிந்துரைக்கும் நாணய நிதியம்
இலங்கையில் அரசாங்கத்தின் வருவாயை அதிகரிப்பதற்கான உத்தியாக , சொத்து வாடகைக்களுக்கான வருமான வரியை 2025 ஏப்ரல் மாதத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைக்கு கொண்டுவர சநாவதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ளது.
வாடகை வீடுகள் மற்றும் பயன்படுத்தப்படாமல் வெறுமனே உள்ள குடியிருப்பு சொத்துக்களுக்கு வாடகை வருமான வரி ஒன்றை அறிமுகப்படுத்த சர்வதேச நாணய நிதியம் பரிந்துரை செய்யுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் சர்வதேச நாணய நிதியம் சிறீலங்கா தொடர்பில் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட பல விடயங்களில் இதுவும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான நான்கு வருட விரிவான நிதி வழங்கும் செயற்பாட்டுத் திட்டங்களின் இரண்டாவது மீளாய்வைத் தொடர்ந்து இந்த IMF Country Report 24/161 அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்குள் இந்த வரி முறையை முழுமையாக அமுல்படுத்த சிறீலங்கா இலக்கு வைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வரியானது வீட்டின் மதிப்பின் அடிப்படையில் இல்லாமல், அதன் மூலம் பெறக்கூடியதாக எதிர்பார்க்கப்படும்/ பெறப்படும் வருமானத்தின் அடிப்படையிலாகும் எனவும் மேலும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த வரி முறையை நடைமுறைப்படுத்துவதற்கு உள்ளூராட்சி மட்டங்களில் சரியான தரவுகளைத் பெற்று ஒரு சரியான பட்டியலை நிறுவுதலை சிறீலங்கா கவனம் செலுத்த வேண்டும் எனவும், நாட்டிலுள்ள சொத்துக்களின் புதுப்பிக்கப்பட்ட மதிப்பீட்டுத்தொகை குறித்த பட்டியலில் உள்ளடக்கியிருக்க வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.