ரஷ்ய ஜனாதிபதி மொங்கோலியா பயணம்..!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் மங்கோலியா பயணமாயுள்ளார். இவரை மொங்கோலிய ஜனாதிபதி உக்னாங் இன் குர்ரில்சுக் வரவேற்றார்.இந்த சந்திப்பின் போது இருநாடுகளினதும் பல்வேறு தொடர்புகள் சம்பந்தமாக கலந்துரையாடல் இடம்பெற்றது.
ரஷ்யா உக்ரைன் போர் 2 வருடங்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில் இந்த பயணம் அமைந்துள்ளது. இதே வேளை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் புடினுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் புடினுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக இருக்கும் நாடுகளுக்கு புடின் விஜயம் செய்தால் அந்த நாடு புடினை கைது செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே வேளை மொங்கோலியா சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் உறுப்பு நாடாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் புடினை மொங்கோலிய ஜனாதிபதி வரவேற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.