ஸ்பேஸ் எக்ஸ் மூலம் வெற்றிகரமாக செயற்கை கோளை விண்ணில் செலுத்திய இஸ்ரோ..!

ஸ்பேஸ் எக்ஸ் உதவியுடன் இஸ்ரோவின் செயற்கை கோள் ஒன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

ஜிசாட் -என்2 என்ற செயற்கை கோளே ஏவப்பட்டுள்ளது.ஸ்பேஸ் எக்ஸ் ன் பால்கன் 9 ரொக்கெட்டின் மூலம் அமெரிக்காவின் கேப்கென்வரெல் விண்வெளி ஆய்வு நிலையத்திலிருந்து 4 ஆயிரத்து 700 கிலோ எடையுடைய ஜிசாட்-என்2 செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அடிக்கடி செயற்கை கோள்களை விண்ணில செலுத்திவருகிறது.மேலும் தனியார் நிறுவனங்கள் மூலமும் கோள்களை செலுத்திவருகிறது.இதன்ஒரு கட்டமாக எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ன் பால்கன் 9 ரொக்கெட் மூலம் முதன் முறையாக ஏவி யுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *