பழங்குடியினப் பெண் ஒருவரை இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக பா.ஜ.க பரிந்துரை செய்திருக்கிறது.

இந்தியப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் நரேந்திர மோடியின் பா.ஜ.க ஒடிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்த அனுபவமுள்ள அரசியல்வாதி ஒருவரை அடுத்த ஜனாதிபதியாக முன்வைத்திருக்கிறது. பழங்குடி மக்களைச் சேர்ந்த, திரௌபதி மர்மு என்ற 64 வயதானவரே அப்பெண் ஆகும். அவரே இந்தியாவின் முதலாவது பெண் ஜனாதிபதியாகும் வாய்ப்புள்ளவர் என்று கருதப்படுகிறது.

செவ்வாயன்று பிரதமர் மோடி பங்குபற்றிய அவரது கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் ஜனாதிபதிப் பதவி அரசியல் அதிகாரங்கள் இல்லாத ஒரு கௌரவப் பதவியாகும். இதற்கான வாக்கெடுப்பு ஜூலை 18 ம் திகதியன்று நடைபெறும்.

குறிப்பிட்ட பழங்குடி இனமொன்றின் தலைமையைக் கொண்டிருதவர்கள் மர்முவின் தந்தையும், பாட்டனாரும். மர்மு ஆசிரியையாகப் பணியாற்றி தனது இனத்தவரின் அரசியல் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்க ஆரம்பித்தார்.  அவர் ஆளும் கட்சியான பா.ஜ.க-வில் இணைந்து பல பதவிகளை வகித்து ஜார்கந்த்தின் ஆளுனராகினார்.

கணிசமான அளவு பழங்குடியினரைக் கொண்ட இந்தியாவில் அவர்களில் ஒருவரை, அதுவும் ஒரு பெண்ணை ஜனாதிபதி வேட்பாளராக முன்வைத்திருப்பதன் மூலம் அப்பதவிக்குத் தமது வேட்பாளர்களைத் தேடிக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சிக்கு பா.ஜ.க கடும் சவாலை விட்டிருக்கிறது. காங்கிரஸ், ஜார்கந்த் முக்தி மோட்சா ஆகிய கட்சிகளில் பல பழங்குடி மாநில, பாராளுமன்றப் பிரதிநிதிகள் நீண்டகாலமாகவே இருக்கிறார்கள். 

எதிர்க்கட்சிகள் தமது பங்குக்கு பா.ஜ.க-வின் முன்னாள் நிதி அமைச்சராக இருந்த 84 வயதான ஜஸ்வந்த் சிங்ஹாவை த் தமது வேட்பாளராக்கியிருக்கிறார்கள். மோடியுடன் கருத்து வேறுபாடுகளால் அக்கட்சியை விட்டுப் பிரிந்த சிங்ஹாவை ஜனாதிபதியாக்க எதிர்க்கட்சிகள் முயன்றாலும் சாணக்கியமாக பா.ஜ.க முன் நிறுத்தியிருக்கும் பெண்+ பழங்குடியினர் ஆகிய முர்முவை வெல்ல வாய்ப்பில்லை என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *