இளைஞர்களே உங்களுக்காகவே இது..!

ஆண்கள் தினம் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டும் என்று பலர் விரும்பினார்கள் அதன்படி கவிதை ரசிகனாகிய நான் ஒரு கவிதை எழுதி இருக்கிறேன் இது பற்றி கருத்துக்கள் எதிர்பார்க்கிறேன் நண்பர்களே….!!!

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

ஆண்கள் ஒரு அதிசயம் படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

பெண்கள்
நாட்டின் கண்கள் என்றால்
ஆண்கள்
அதைப் பாதுகாக்கும்
இமைகள்……
நல்லதொரு குடும்பம்
பல்கலைக்கழகம் என்றால்
அதில் ஆண்கள்
பேராசிரியர்கள்……!!!

இளைஞர்கள்
இந்தியாவின்
முதுகெலும்பு என்று
சொல்ல காரணம்….
ஆண்களின்
உழைப்பால் தான்
இந்தியா
நிமிர்ந்து நிற்கிறது….!!!

வீட்டிற்காகவும்
நாட்டிற்காகவுமே !
வாழ்ந்து இறப்பதால்
இவ்வுலகில்
ஆண்களுக்கு ஈடு
ஆண்களே…..!!!

‘புலியைப்” போல்
வீரமுடையவன் என்றாலும்….
அன்பு கூட்டிற்குள்
‘கிளியைப்’ போல்
அடைப்படக் கூடியவன்…!!!

தன்னைச் சுற்றி
‘இருள்’ இருந்தாலும்
மற்றவர்களுக்கு
‘வெளிச்சம்’ கொடுக்கும் மெழுகுவர்த்தி….!!!

வானம்
சிறகு இருந்தாலும்
பறக்க மறந்தவன்….
சுதந்திரம்
அதிகாரம் இருந்தாலும்
அதைத் துறக்கத் துணிந்தவன்…

‘முடி சூடா
மன்னனாக’ இருந்தாலும்
அம்மா மனைவி
மகள் தங்கை
அக்கா தம்பி
அண்ணன் சாம்ராஜியத்தில்
‘அடிமையாக’
வாழக்கூடியவன்…..!!!

அழுத்தெறிந்தும்
அழு முடியாதவன்…
சிரிக்கத் தெரிந்தும்
சிரிப்பதற்கு
நேரம் இல்லாதவன்….
உரிமைகள் இருந்தும்
முடிவெடுக்க முடியாதவன்…!!!

ஆண்களின் சம்பளத்தை
யார் யாரோ
செலவு செய்வார்கள்
‘அவர்களைத்’ தவிர…..

வாழ்க்கையில்
விட்டுக் கொடுத்துப்போவார்கள்
ஆனால்
ஆண்களுக்குத்தான்
விட்டுக் கொடுத்துப்போவதே
வாழ்க்கையாகி விட்டது….!!!

ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்*கவிதை ரசிகன் குமரேசன்*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *