இஸ்ரேல் ஹிஸ்புல்லாக்களுக்கிடையிலான போர் நிறுத்தம் மகிழ்சியளிக்கிறது-இங்கிலாந்து பிரதமர்..!
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இராணுவத்திற்கு இடையிலான போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர்ஸ்டோமர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா இராணுவத்திற்கும் இடையே நீண்ட காலமாக போர் நீடித்துவருகின்ற நிலையில்,இன்று உறுதி செய்யப்பட்ட போர் நிறுத்த ஒப்பநதம்,லெபனான் மற்றும் இஸ்ரேலிய குடிமக்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும்.அவர்கள் கட்ந்த சில மாதங்களாக அழிவுகரமான மோதல்களின் போது நினைத்து பார்க்க முடியாத விளைவுகளை சந்தித்துள்ளனர்.
இப்போது இந்த ஒப்பந்தம் லெமனானில் நீடித்த அரசியல் தீர்வாக மாற்றப்படவேண்டும்.இது பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்.1701 ன் அடிப்படையில் குடிமக்கள் தங்களது வீடுகளுக்கு நிரந்தரமாக திரும்பவும்,எலலையின் இருபுறமும் உள்ள சமூகங்கள் மீண்டும் கட்டமைக்கவும் அனுமதிக்கும்.
மத்திய கிழக்கில் நீண்ட கால நிலையான அமைதியை பின் தொடர்வதற்காக நடந்துவரும் வன்முறை சுழற்சியை உடைபபதற்கான முயற்சியை இங்கிலாந்தும் அதன் நட்பு நாடுகளும் தொடர்ந்தும் முன்னணியிலிருக்கும்.காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம்,பணயக்கைதி விடுவிப்பு,மனிதபிமான நடவடிக்கைகளுக்காக உதவிக்களுக்காக கட்டுப்பாடுகளை நீக்குதல் ஆகியவற்றை நோக்கி முன்னேற்றை காணவேண்டும்” என தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டிறகு மேலாக இஸ்ரேலானது பாலஸதீனத்தின் மீது தாக்குதல் தொடுத்து வந்த நிலையில்.லெபனான தலைமையிடமாக கொண்டியங்கும் ஹிஸ்புல்லா இராணுவமானது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நின்று இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.