அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்..!
அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடததிய தாக்குதலில் 07 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.மேலும் 01 பெண் உட்பட 28 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய காஸாவிலுள்ள நுசிராத் அகதிகள் முகாம் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர்களின் உடலகள் கான் யூனிஸிலுள்ள நாசர் மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபபட்டுள்ளது.
ஓராண்டிறகு மேலாக இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின மீது தாககுதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக பலர் உயிரிழந்ததுடன்,பலர் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுளளனர் என்பது குறிப்பிடத்தக்கது.