வைத்திய சாலை மீது ட்ரோன் தாக்குதல்..!
சூடானில் உள்ள வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சூடானின் டார்பூர் பகுதியில் உள்ள எல் பஷார் என்ற பகுதியில் உள்ள வைத்தியசாலை மீதே ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது 70 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.சூடானில் இராணுவம் மற்றும் துணை இராணுவம் ஆகியவற்றிற்கிடையில் மோதல் இடம் பெற்றுவருகிறது.இந்நிலையிலேயே இந்த தாக்குதல் நடைப்பெற்றுள்ளது.இந்த தாக்குதலை உலக நாடுகள் கண்டித்துள்ளன.