நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது..!
நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.உயரிய விருதான இந்த விருது இவருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர் .டுபாயில் நடந்த கார்பந்தய போட்டியிலும் பங்குபற்றி 3 வது இடத்தினை தனதாக்கி இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருந்தார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு முக்கிய துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு பத்ம ஶ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுவருகிறது.இதற்கமைய 2025ம் ஆண்டுக்கான விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.