நியூஸிலாந்தின் பள்ளிவாசல் கொலைகாரன் இந்தியாவில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தான்.

இரண்டு நியூஸிலாந்து பள்ளிவாசல்களில் 51 பேரைச் சுட்டுக் கொன்ற பிரண்டன் டரண்ட் இந்தியாவில் 2015 நவம்பர் 21 முதல் 2016 பெப்ரவரி 18 வரை தங்கியிருந்தான் என்று சமீபத்தில் அவனது வாழ்க்கை விபரங்களை ஆராய்ந்த பிரத்தியேக குழு குறிப்பிடுகிறது.

30 வயதான 2012 வரை பிரண்டன் டரண்ட் 2012 வரை ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் பிரத்தியேக பயிற்சியாளராக வேலை செய்தான். அச்சமயத்தில் ஏற்பட்ட ஒரு பாதிப்பால் வேலையை விட்டு நின்றுவிட்டான். அதன் பின்னர் அவன் எப்போதுமே சம்பளம் கொடுக்கும் தொழிலெதிலுமே ஈடுபட்டதில்லை.

தனது பெற்றோரின் வருமானங்களிலும், சொத்துகளிலும் வாழ்ந்த அவன் அதன் பின்னர் பிரயாணங்கள் செய்ய ஆரம்பித்தான். முதல் பயணமாக அவன் 2013 இல்  ஆஸ்ரேலியாவிலும் நியூஸிலாந்திலும் சுற்றிப் பார்த்தான்.

2014 முதல் 2017 வரை டரண்ட் உலக நாடுகளில் பயணம் செய்தான். வட கொரியாவுக்கு ஒரு குழுவுடன் பயணம் செய்ததைத் தவிர அவன் மற்றைய பயணங்களைத் தன்னந்தனியாகவே செய்திருக்கிறான். இந்தியாவைவிட ரஷ்யா, சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கும் பிரயாணம் செய்திருக்கும் அவன் மிக நீண்ட காலம் தங்கியிருந்தது இந்தியா என்று தெரியவருகிறது.

அவன் இந்தியப் பயணத்தில் என்ன செய்தான், எங்கே தங்கியிருந்தான் போன்ற விபரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால், அங்கேயோ வேறு இடங்களிலோ அவன் எந்தக் குழுக்களுடனும் சேர்ந்திருக்கவில்லையென்று சொல்லப்படுகிறது. வெள்ளை நிறவாதிகளின் இணையத் தளங்களில் அவன் தன் நேரத்தை நிறையவே செலவிட்டிருக்கிறான். 

ஆஸ்ரேலியாவில் பிறந்து வளர்ந்த டரண்ட் தனது பிரயாணங்களிலிருந்து 2017 இல் திரும்பியதும் நியூஸிலாந்தில் குடியேறினான். சிறு வயதிலேயே வெள்ளை நிறவாதக் கருத்துக்களைக் கொண்டிருந்த டரண்ட் தனது பெற்றோர்களின் விவாகரத்தைச் சுற்றிய சம்பவங்களாலும் தாயின் வாழ்வில் அதன் பின்னர் சேர்ந்திருந்த வெவ்வேறு மோசமான ஆண்களின் நடத்தையாலும் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

டரண்ட் சாதாரணமான வழக்கமான நிறவாத யுடியூப் படங்களைப் பார்த்தல், அப்படியான கருத்துக்களைக் கொண்ட மூடிய இணையக்குழுக்களில் பங்குபற்றுதல் அவனது நிறவாதத்துக்கு மேலும் இரை போட்டிருக்கவேண்டும் என்று குறிப்பிடும் அறிக்கை அவன் நியூஸிலாந்துக்குக் குடிபெயர்ந்தபோதே ஒரு பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருக்கலாம் என்று தெரிவதாகக் குறிப்பிடுகிறார்கள். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *