தொடராக மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை கைப்பற்றிய அவுஸ்ரேலியா

ஆஷஸ் கிண்ணத்துக்காக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில், அடுத்தடுத்து மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்தை தோற்கடித்த அவுஸ்ரேலியா தொடரை 3-0 எனும் கணக்கில் கைப்பற்றியுள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான நேற்று ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற இங்கிலாந்து தொடரை இழந்தது.

அவுஸ்ரேலியாவின் மெல்போனில் நடைபெற்ற இந்த போட்டியில் நேற்றையதினம் 31 ஓட்டங்களுக்கு 4விக்கெட்டுக்களை மட்டும் இழந்து மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து வெறும் 81 நிமிடங்களுக்குள் 68 ஓட்டங்களை மட்டுமே எடுத்து மளமள என விக்கெட்டுக்களை இழந்தது.

அவுஸ்ரேலிய அணியின் ஸ்கொட் போலண்ட் தனது அறிமுகப்போட்டியில் மிகச்சிறப்பாக இரண்டாவது இனிக்ஸ்ஸின் போது 4 ஓவர்கள் பந்து வீசி 7ஓட்டங்களை மாத்திரமே கொடுத்து 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியது இங்கு ஒரு சாதனைப்பதிவாகியது.

1904 ம் ஆண்டுக்குப்பின் அவுஸ்ரேலியமண்ணில் இங்கிலாந்து பெற்ற மிகக்குறைந்த ஓட்ட எண்ணிக்கை என குறிப்பிடப்படும் அதேவேளை இங்கிலாந்து அணியை மிக பலவீனமான அணியாக என இங்கிலாந்து ஊடகங்கள் எழுதிவருகின்றன.

இதேவேளை இந்த ஆஷஸ் தொடரை அவுஸ்ரேலிய அணி 5-0 என்ற கணக்கில் வென்று வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்வுகூறுகின்றனர்.

நான்காவது டெஸ்ட் போட்டி வரும் ஆண்டு ஜனவரிமாதம் 4ம்திகதி சிட்னியில் தொடங்கவுள்ளது.