ஜனவரி 11 இலிருந்து PCR பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தத் தேவையில்லை|இங்கிலாந்தில் மட்டும்

கோவிட் அறிகுறிகள் இல்லாத நபர்களுக்கு அவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த இனி PCR அவசியமில்லை என இங்கிலாந்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் ஜனவரி 11 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது , அத்துடன் தற்போது இங்கிலாந்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும் இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவகம் (UK health security Agency ) தெரிவித்துள்ளது.

கோவிட் பரவும் வேகம் தற்சமயம் இங்கிலாந்தில் அதிகரித்துள்ள சூழ்நிலையில், விரைவான பரிசோதனைகள் சோதனைகள் மிகவும் துல்லியமானவை என்று மக்கள் நம்பமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதிய வழிகாட்டுதலின்படி, இங்கிலாந்தில் Lateral flow Test லேட்டரல் ஃப்ளோ பரிசோதனை மூலம் (LFD) கோவிட் தொற்று உறுதிப்படுத்துமிடத்து , அந்த முடிவைப் அரச இணையத்தில் முடிவை பதிவிடவேண்டும், தொடர்ந்து உடனடியாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளவும் வேண்டும், என்று சொல்லப்படுகிறது. ஆனால் தொடர்ந்து வழமையாக செய்யப்பட வேண்டிய PCR பரிசோதனையை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என புதிய வழிகாட்டல் குறிப்பிடுகின்றது.

தேசிய புள்ளியியல் அலுவலக தரவுகளின் படி, தற்போது மொத்ணமாக 4% ஆன பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அதேவேளை இங்கிலாந்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் வீதம் 1% க்கும் குறைவாக வரும் போது இந்த புதிய மாற்றம் மதிப்பாய்வு செய்யப்படும் எனவும் தேசிய சுகாதார பாதுகாப்பு நிறுவகம் குறிப்பிடுகிறது.