விமானம் பறந்துக் கொண்டிருந்த நிலையில் ஜன்னலை உடைக்க முயன்ற நபர்..!
நடுவானில் விமானம் பறந்துக்கொண்டிருந்த நிலையில் விமானத்தின் ஜன்னலை இளைஞர் ஒருவர் உடைக்க முயன்ற சம்பவம் ஒன்று அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

டென்வர் மாகாணத்திலிருந்து ஹூஸ்டன் விமான நிலையத்திற்கு சென்ற விமானமானத்திலேயே இந்த சமபவம் நிகழ்ந்துள்ளது.
ஒரு பெண் தன் பின்னால் இருந்த நபரிடம் இருக்கையை மாற்றுமாறு கேட்டுளளார்.இதன் போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் பெண்ணின் இருக்கை மற்றும ஜன்னலை காலால் உதைத்து உடைக்க முயன்ற நிலையில் விமானத்தில் பயணித்த பயணிகள் கத்தியுள்ளனர்.
அத்தருணத்தில் அங்கிருந்த முன்னால் இராணுவ வீரர் ஒருவர் அந்த இளைஞனை பிடித்து நிறுத்தியுள்ளார்.இதனையடுத்து ஹூஸ்டனில் விமானம் தரையிறங்கிய பின் குறித்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.