பதிவுகள்

எங்களுக்குள் வலிகள் ஆயிரம்..!

காஷ்மீர் கண்ணீர்

என் பெயர் காஷ்மீரி
என் தாய்நாடு
பூமியின் சொர்க்கம்!

இந்த பூமியில்
இறைவன் எல்லாவற்றையும்
மிகவும் அழகாக படைத்து விட்டான் !

ஆயினும்
.எங்களுக்குள்
வலி ஆயிரம்!

அடிக்கடி
எங்கள்மீதும்

குண்டுகள் பாயும்!

எங்கள்
உடலெங்கும்
இரத்தம்
பெருக்கெடுத்து ஓடும்!

அவ்வப்போது
வெடிக்கும் குண்டுகள் ஓசை தாய்ப்பால் குடிக்கும்
குழந்தையின் ஈரல்குலையையும் நடுநடுங்க வைக்கும்!

என் தேசத்தின் விதிகொடியது எல்லாருக்கும்
பிறந்த நாடு தான்
தாய் நாடு !

ஆனால்
நான்
பிறந்த தேசத்திலே எனக்கும்
என் வயிற்றில்
பிறந்த குழந்தைகளுக்கும் உரிமை மறுக்கப்படுகிறது!

அதனால்
சொந்த நாட்டிலேயே நாங்கள் அனாதை ஆக்கப்பட்டவர்கள்!

என்னைப்
பெற்றெடுத்த
என்தாய்
எனக்குச் சொந்தமில்லை என்கிறார்கள்!

நான் பிறந்த நாடும் என் தாய் நாடு இல்லை என்கிறார்கள்!

ஒவ்வொரு காஷ்மீரின் குடிமக்களின் கண்ணீர் எங்கள் உடலெங்கும் வழிகிறது !

எல்லாரும்
சுதந்திர காற்றை சுவாசிக்க
என் மக்கள் மட்டும் அடிமைகளாக!

எப்பொழுதும்
எதுவும் நடக்கும்
என் அப்பாவி
மக்கள் மீது
தீடிரென்று
தீவிரவாத
குண்டுகள் விசப்படும்‌!

குண்டும்
அடிக்கடி
எம்மீதே
வெடிக்கும் !

தீவிரவாதிகள் மீது
வீசும் குண்டுகள் பல சமயம்
எங்கள் மீதே வெடிக்கும்!

வெளியே சென்ற
பிள்ளைகள்
வீட்டுக்கு
திரும்பி வரும் வரை எங்கள் உயிர் எங்களிடம் இல்லை!

எங்கள் வாழ்வாதரமே எம்மை நாடிவரும் சுற்றுலா!

எங்களின்
இரத்த சொந்தங்கள்
சுற்றுலாவுக்கு வரும்
எம்
சகோதர சகோதரிகள்!

பிழைப்புக்கான எங்களின்
வாழ்வாதாரம்!

எங்கள் ஊர்

நாங்கள்
வாழ்வதற்காக
உயிர் வாழ்கிறோம்!

ஆனால்
எங்கள் வாழ்வாதாரத்தை
அழிக்க
தீவிரவாதிகள்
எங்கள் பெயரில் சதி செய்கிறார்கள்!

அன்பானவர்களே எங்களுக்கும்
குடும்பம் உண்டு
பாசம் உண்டு!

எங்களின்
வாழ்க்கையை
வேரோடு
அழிக்கும் தீவிரவாதத்தை
வேரோடு சாய்க்க
வாருங்கள்!

எங்கள்
வலிகளையும் வேதனைகளையும் அழிக்க வாருங்கள்!

ஒன்றினணவோம் மதத்தின் பெயரால் தீவிரவாதம் செய்யும் தீவிரவாதிகளை
அழிக்க!

வாருங்கள்
கை கோர்த்து
இந்தியனாய் அழிப்போம்!
இரம்ஜான் எபியா சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *