தமிழ் ஒலிபரப்பில் முன்னோடியாக விளங்கிய ஆனந்தி சூரியப்பிரகாசம் காலமானார்

தமிழோசை ஆனந்தி’ என தமிழ் உலகம் அறிந்திருக்கும் பி.பி.சி தமிழோசை ஆனந்தி சூரியப்பிரகாசம் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை லண்டனில் காலமானார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்தவரான ஆனந்தி சூர்யப்பிரகாசம், இலங்கை வானொலியில் சனா அவர்களின் தயாரிப்பில் உருவான பல நாடகங்களில் நடித்துப்புகழ்பெற்றார். சமகாலத்தில் அறிவிப்பாளராகவும் திகழ்ந்தார்.
1970 காலகட்டத்தில் இங்கிலாந்தை சென்றடைந்த அவர், பி.பி.சி தமிழோசையின் பகுதிநேர அறிவிப்பாளராக பணியாற்றிவந்தார்.
பின்னர், நிரந்தர அறிவிப்பாளராகிப் பொறுப்புகள் ஏற்றுச் செயற்பட்டவர், மூன்று தசாப்தங்களாக பி.பி.சி தமிழோசையில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
அத்துடன் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் 2006ஆம் ஆண்டிற்கான தலைவராக ஆனந்தி சூரியப்பிரகாசம் தெரிவு செய்யப்பட்டிருந்தார். உடல் நலக்குறைவுக்குள்ளாகியிருந்த நிலையில் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.